திருநாவுக்கரசரின் அடைவு திருத்தாண்டகம் சுட்டும் இறைத் தலங்களுள் ஊர்ப்பொதுக் கூறுடன் திகழும் பெயர்களுள் ஒன்று சேற்றூர். வயல், கழனி சாரணமாகச் சேறு நிறைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம். பிற விளக்கங்கள் தெளிவாகவில்லை.
நாலூரும் சேற்றூரும் நாரையூரும் (திருநா – 286-4-4)