“வாழுங்காலம் நெடுங்காலம் ஆகுக!” என்று வாழ்த்தும் ‘வாழிய’ என்னும்அகர ஈற்றுக் குறிப்பு வியங்கோள்வினை ‘சேய் என் கிளவி’ ஆகும். அஃதுஇயல்பாயும் ஈறு கெட்டும் வருமொழியொடு புணரும்.எ-டு : வாழிய கொற்றா, ஞெள்ளா, வளவா, அரசே;வாழி கொற்றா, ஞெள்ளா, வளவா, அரசே (தொ. எ. 211 நச்.)