‘செரு’ இருவழியும் புணருமாறு

செரு உகர ஈற்றுப் பெயராதலின் உருபேற்குமிடத்து இன்சாரியை பெற்றுச்செருவினை – செருவினால் – என்றாற் போலப் புணரும். (தொ. எ. 173நச்.)வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், அம்முச்சாரியை பெற்று, அம்மின்மகரம் கெட, வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்குச் செருவக்களம்என்றாற்போலவும், சாரியையின்றிச் செருக்களம் என்றாற்போலவும் புணரும்;மென்கணம் வரின், வேற்றுமைப் புணர்ச்சியுள், அம்மின் மகரம் கெடச்செருவஞாற்சி – செருவநன்மை – செருவமாட்சி என்றாற் போலவும், இடைக்கணம்வரினும் அவ்வாறே செருவயாப்பு – செருவவன்மை – என்றாற் போலவும் புணரும்.(260 நச்.)உயிர்க்கணம் வரின், இடையே வரும் அம்முச்சாரியையின் மகரம் கெடுதலும்அம்முப் பெறாமையும் என்ற இருநிலையும் உண்டு. செருவவடைவு, செருவடைவுஎனவரும். (இடையே வகரம் உடம்படுமெய்) (130 நச்.)இனி அல்வழிப் புணர்ச்சிக்கண், வன்கணம் வரின் மிக்கும், ஏனைக் கணம்வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : செருக் குறிது, செருச் சிறிது, செருத் தீது, செருப்பெரிது; செரு ஞான்றது, நீண்டது, மாண்டது; செரு யாது, வலிது; செருவரிது (வகரம் உடம்படுமெய்) (254 நச்.)