‘செரு’ இயற்கைத் தம் ஒற்று மிக்குப்புணருமாறு

செரு என்ற பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வருவழி,அம்முச்சாரியை பெற்று, அதன் மகரம் கெட வருமொழி வல்லெழுத்து மிக்குச்செருவக்களம் – செருவச்சேனை – செருவத்தானை – செருவப்பூழி என்றாற் போலமுடியும்; சாரியை பெறாதவழிச் செருக்களம் – செருச் சேனை – செருத்தானை -செருப்பூழி – என வருமொழி வல்லெழுத்தே மிக்கு முடியும். (தொ. எ. 260நச்.)