‘செய் என் ஏவல்வினைப் பகாப்பதம்’

நட வா முதலிய இருபத்து மூன்று ஈற்றவாகிய சொற்கள் செய் என்னும்ஏவல்வினையும், செய் என்னும் வினையினது பகாப்பதமாகிய பகுதியும்ஆம்.எடுத்துக்கொண்ட ஏவற்பொருளும் பகுதிப்பொருளும் தந்து நிற்கும் நட வாமுதலிய வாய்பாடுகளை எண்ணித் தொகுத்த ‘இருபான் மூன்றாம் ஈற்ற’ என்னும்தொகை ‘செய்யென் ஏவல்’ என்னும் பயனிலையொடும் ‘செய்யென் வினைப்பகாப்பதம்’ என்னும் பயனிலையொடும் தனித்தனி முடிந்தது. இஃதுஇரட்டுறமொழிதல் என்னும் உத்தி.செய் என்னும் வாய்பாட்டு ஏவல்வினையும், ஏனை வினை களின் (பகாப்பதம்ஆகிய) பகுதியுமாக நட வா மடி சீ விடு கூ வே வை நொ போ வெள உரிஞ் உண்பொருந் திரும் தின் தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்ற 23ஈற்றுச்சொற்களும் வரும். (நன். 137 சங்கர.)செய்யாய் என்பதே ஏவல்வினை எனக் கொண்டு, இவை இருபத்து மூன்றும் செய்என்ற ஏவல்வினையின் பகுதியும், செய் என்ற ஏனை வினையின் பகுதியும்என்பர் சிவஞான முனிவர். (137)நடந்தான், வந்தான் முதலிய வினைகளின் (பகாப்பதமாகிய) பகுதி நட வாமுதலியன.நட வா முதலிய இருபத்துமூன்றாம் ஈற்றவும் செய் என்னும் ஏவலினதுபகாப்பதமாகிய பகுதியும், ஏனை வினையினது பகாப்பதமாகிய பகுதியும் ஆம்.‘செய்யென் வினைப்பகாப் பதம்’ என்ற துணையானே ‘செய் என் ஏவற் பகாப்பதம்’அடங்காதோ? வேறு கூறவேண்டியது என்னை யெனின்,நட வா உண் தின் என்றல் தொடக்கத்து முதனிலைகளே விகுதியொடு புணராதுதனித்து நின்ற ஓசை வேறுபாட்டான் முன்னிலை ஏவலொருமை எதிர்கால முற்றுப்பொருண்மை உணர்த்தினவோ, விகுதியொடு புணர்ந்து நின்றே அப் பொருண்மைஉணர்த்தினவோ என்று ஐயுறுவார்க்கு (விகுதி யொடு புணர்ந்து நின்றேஉணர்த்தின என்று) ஐயம் அறுத் தற்குக் கூறியது என உணர்க. (137சிவஞா.)