‘செய்யுள் கண்ணிய தொடர்மொழி’

செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப் படும்செய்யுள்முடிபுடைய சொற்கள்.இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற நால் வகைப்பட்ட சொற்கள்ஒன்றோடொன்று தொடர்ச்சிப்பட அமைவன செய்யுளாம். (தொ. சொ. 397 நச்.)அத்தொடர்,‘யாயே கண்ணினும் கடுங்கா தலளே’ (அகநா. 12 )என்றாற் போலப் பொருள் பொருத்தமுறத் தழுவுதொடராகத் தொடரலாம்.அன்றி,‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்பரல்அவல் அடைய இரலை தெறிப்ப’ (அகநா. 4)என ‘மருப்பின் இரலை’ என்று பொருள் அமையவும், ‘மருப்பிற் பரல்’ எனத்தழாஅத் தொடராகவும் தொடரலாம். (தொ. எ. 213 நச்.)