இளம்பொன் சாத்தன் கொற்றனார் என்ற புலவர் செயலூர் என்னும் ஊரினர் (அகம் 77)
“வயிரச் செயல் தாலி மணிவடம் (S. 1. 1. ii, 16) என்ற கல் வெட்டுக் தொடரில் இழைப்பட வேலை அதாவது ஆபரணத்தில் மணி வைத்துச் செய்யும் வேலை என்ற பொருளில் செயல் என்னும் சொல் ஆட்சி பெற்றுள்ளது இவ்வூரில் அந்த இழைப்பட வேலை நடைபெற்று வந்து அதனால் தான் இப்பெயர் பெற்றதோ என்ற எண்ணம் தோறுகிறது. நடைபெற்ற தொழிலால் பெயர் பெற்ற ஊராக இருக்கலாம். செயலூரைச் சேர்ந்த புலவர் இளம் பொன் சாத்தன் கொற்றனார் எனப் பெயர் பெற்றிருப்பதை நோக்கும் பொழுது பொன் என்னும் அடைமொழி ஏதாவது சிறப்பைக் குறிக்கிறதோ என ஆயும் எண்ணம் உருவாகிறது. பொன் அணியில் இழைப்பட வேலை நடைபெறும் ஊரில் இருந்த புலவர் பெயரில் பொன் என்ற அடையிருப்பது நாம் மேற்கூறிய ஊர்ப் பெயர்க் காரணத்தை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.