செங்குன்றூர்

மலைநாட்டுத் தலம் செங்குன்றூர். கொடிமாடச் செங்குன் றூர் போன்று நிறம் காரணமாகவும், குன்று காரணமாகவும் பெயர் பெற்ற தன்மை அமைகிறது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம் இது. திருமால் கோயில் சிற்றாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் சிறந்தும், செழித்தும் காணப்பட்டது என்பதனை, நம்மாழ்வார் பாடல் தருகின்றது.
கய மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டுத் திருச்செங் காட்டங்குடி என அழைக்கப்பெறுகிறது. முதல் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு மும்முடிச் சோழ வள நாட்டு மருகல் நாட்டுச் திருச்செங்காட்டங்குடி எனக் காட்டுகிறது. – திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் – பக்-12
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு – நம் – 2888
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன்றூர் 2889
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும்புகை விசும் பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச்சிற்றாறெனக்கு நல்லரணே -2891