செங்காட்டங்குடி

இன்றும் இப்பெயராலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். இத்தலம் பற்றிய புராணக்கதை. கஜமுகா என்பவன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அவனை ஒழித்துக்கட்ட சிவகுமாரனான விநாயகர் யானை முகத்துடன் அவதரித்து அவனைச் சம்ஹரித்திருக்கிறார். இந்த கஜாமுகா சுரனைச் சம்ஹரித்தபோது அவனது இரத்தம் செங்காடாய்ப் பெருகிய காரணத்தால் செங்காட்டங்குடி என்ற பெயர் நிலைத்திருக்கிறது. இந்தப் பழி நீங்க இத்தலத்தில் இறைவனைக் கணபதி வழிபட்ட காரணத்தால் சணபதீச்சுரம் என்ற பெயர் பெற்றிருக்கிறது என்றடைகிறது. இதனைக் கந்த புராணம்,
ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத்தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்தீர் நீத்தமாய ஒழுகும் வேலைப்
பாடுறவருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்டக இருந்ததம்மா
மீண்டு செங்காட்டில் மேவி மெய்ஞ்ஞானத் தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்றுருத் தாபித் தேத்திப்
பூண்ட பேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச்சரம தென்பர்
எனக் குறிப்பிடுகிறது எனினும் ஆத்திமரம்’ தலவிருட்சம் எனக் காணும் போது செங்காடுடன் தனைத் தொடர்புபடுத்த முடியுமா ? எனக் காணலாம். செங்காட்டில் உள்ள குடியிருப்பு என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்க, இங்குள்ள கோயில் இறைச் சிறப்பால் கணபதீச்சரம் எனப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் இத்தலம் மருகல் என்ற பகுதியுள் அடங்கி பின்னர் பக்கத்தில் உள்ள செங்காட்டங்குடியில் மக்கள் குடியேறிய நிலை யில் இப்பெயர் அமைகின்றது என்ற கருத்து, மருகல் செங்காட்டங்குடி என்ற தாடர்புண்மை புலப்படுத்தும் ஒன்று. ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் (6) இரண்டையும் ஒரே பதிகத்தில் பாடும் தன்மை இரண்டின் அருகாமையை உணர்த் தும் நிலையாக அமைகிறது மேலும் இன்றும் மருகலிலிருந்து இரண்டு மைலில் அமைகிறது செங்காட்டங்குடி என, சுட்டக் காண்கின்றோம். கல்வெட்டுச் சான்றும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கருநாட்டக் கடைசியா தம் களிகாட்டும் காவேரித்
திருநாட்டு வளங் காட்டும் செங்காட்டம் குடியாகும்
என சேக்கிழார் இவ்வூர்ச் சிறப்பு தருகிறார். (சிறுத்தொண் -1) அப்பராலும் பாடல் பெற்ற இத்தலம் பரணராலும் பாடப் பட்டுள்ளது.
சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்கா அட்டாங்குடி மேல்
சேரும் உருவுடையீர் செல் சிவபெரு – திருவந் -69
என்ற பாடல் செங்கா அட்டங்குடி’ என இவ்வூர்ப் பெயரைத் தருதல், செங்காடுக்கு வேறாகப் பொருள் தருவதுபோல் தோற்றம் தருகிறது. அடுதல்’ சமைத்தல், போரிடுதல் என்ற பொருளைத் தரும் நிலையில் போருடன் தொடர்பு கொண்ட பெயராக இது அமையவாமோ எனவும் பார்க்கலாம்.