இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் “பெருங் கெளசிகனார் பல்குன்ற கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடுகடாம்” என்ற தொடர் “செங்கண்மா” என்னும் ஊர் நன்னனுக்கு உரியது என அறிய முடிகிறது. கொண்கானத்து நன்னன்வேறு. செங்கண் மாவைத் தலை நகராகக் கொண்டு பல்குன்ற நாட்டை ஆண்ட நன்னன் வேறு. நன்னன் சேய் நன்னனின் தலைநகராகிய இச்செங்கண் மாநகர் தொண்டைநாட்டைச் சார்ந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சவ்வாது மலைத்தொடரே நன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த மலைநாடு. அம் மலையின் தெற்கில் “செங்கம்” என்னும் பெயருடன் இன்று விளங்கும் ஊரே நன்னன் காலத்தில் செங்கண்மா என்னும் பெயருடன் பெரிய நகரமாய் விளங்கியது. செங்கண்மா என்றால் சிவப்பான கண்ணையுடைய விலங்கு கரடி எனப்பொருள் காணப்பெறுகிறது. மலைநாட்டுப் பகுதியை சேர்ந்த இவ்வூர் சிவப்பான கண்ணையுடைய விலங்காகிய கரடியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டு பெயா் பெற்றதோ என எண்ணத் தோன்றுகிறது. இக்கருத்தை வலியுறுத்த சான்று ஒன்றும் இல்லை. மேலும் நடைபெறும் ஆய்வில் இதற்கேற்ற சான்று ஏதாவது கிடைக்கலாம்.
“மலையென மழையென மாடமோங்கித்
துனிதீர் காதவினினிதமர்ந்து றையும்
பனிவார் காவிற்புல் வண்டிமிரும்
நனிசேய்த்தன்றவன் பழவிறன் மூதூர்” (பத்துப். மலைபடு, 484 487)
மூதூர் என்பது செங்கண்மாவைக் குறிப்பது. அக்காலத்தில் பெரிய நகரமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் பகுதி இது.
செந்தில். பார்க்க அலைவரய்,