‘சுட்டு முதலாகிய வகர இறுதி’புணருமாறு

சுட்டிடைச் சொல்லை முதலாகக் கொண்ட வகர ஈற்றுச் சொற்களாவன அவ் இவ்உவ் என்ற மூன்றாம். அவை உருபேற்குமிடத்தும் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் ணும் வற்றுச்சாரியை இடையே பெற்று, நிலைமொழிவகரத்தை வற்றின்மிசை ஒற்று எனக் கெடுக்க, அவ் + வற்று + ஐ = அவற்றை,அவ் + வற்று + கோடு = அவற்றுக்கோடு என்றாற் போலப் புணரும்.அல்வழிக்கண் அவ் இவ் உவ் என்பன நிலைமொழியாக, வருமொழி முதலில்வல்லெழுத்து வரின் நிலைமொழி வகரஒற்று ஆய்தமாகவும், மெல்லெழுத்து வரின்வந்த மெல்லெழுத்தாகவும் திரிந்தும், இடையெழுத்து வரின் இயல்பாகவும்,உயிர்எழுத்து வரின் ஒற்று இரட்டியும் புணரும்.அவ் + கடிய = அஃகடிய, அவ்+சிறிய = அஃசிறிய, அவ் + தீய = அஃதீய, அவ்+ பெரிய = அஃபெரிய என வரும். இவற்றுள் பின்னைய மூன்று புணர்ச்சியும்இக்காலத்து அரிய.அவ் + ஞாண் = அஞ்ஞாண், அவ் + நூல் = அந்நூல், அவ் + மணி = அம்மணி,அவ் + யாழ் = அவ்யாழ், அவ் + வட்டு = அவ் வட்டு; அவ் + ஆடை = அவ்வாடை.(தொ. எ. 183, 378-381 நச்.)