‘சுட்டு முதலாகிய ஐ என் இறுதி’புணருமாறு

சுட்டிடைச் சொல்லை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொற்கள் அவை இவை உவைஎன்ற மூன்றாம். இவை மூன்றும் அவ்வழிக்கண் வன்கணம் வந்துழி இயல்பாகமுடியும்.எ-டு : அவை கடிய, இவை கடிய, உவை கடிய(தொ. எ. 158 நச்.)இவை உருபேற்கும்போதும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும்,வற்றுச்சாரியை இடையே ஏற்று, வற்றுச்சாரியை வகரஒற்றுக் கெட்டுஅற்றுச்சாரியையாக, அதனொடு புணரும்.எ-டு : அவை + வற்று + ஐ > அவை + அற்று + ஐ = அவை யற்றை (யகரம் : உடம்படுமெய்) (122, 177நச்.)அவை + வற்று + கோடு > அவை + அற்று + கோடு = அவையற்றுக்கோடு (281 நச்.)