தொல்காப்பியனார் ஈற்றயல் எழுத்தையும் ஈறு என்ப ஆதலின், சுட்டுமுதலாகிய ஆய்த இறுதிப் பெயர்கள் அஃது, இஃது, உஃது என்பன. அவைஉருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அன்சாரியை பெற்றுஆய்தத்தைக் கெடுத்துப் புணரும்.எ-டு : அஃது + அன் + ஐ = அதனை; அஃது + அன் + கோடு = அதன்கோடு(தொ. எ. 200, 422 நச். )அது முதலிய முற்றியலுகர ஈற்றுச் சொல்லும், அஃது முதலிய குற்றியலுகரஈற்றுச் சொல்லும் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட்புணர்ச்சிக்கண்ணும்அதனை – அதன்கோடு – முதலியனவாகப் புணரும். இவற்றின் நிலைமொழியை அதுவென்றோ அஃது என்றோ உறுதியாகக் கூற இயலாது.அஃது முதலியன அல்வழிக்கண் வருமொழி முதல் உயிரெழுத் தாயின்அஃதழகியது என்றாற்போல இயல்பாகப் புணரும்; வருமொழிக்கண் மெய்முதலாகியஎழுத்து வரின் ஆய்தம் கெட., அஃது + கடிது = அது கடிது; அஃது + நன்று =அது நன்று என்றாற் போலப் புணரும்; வருமொழி யகரம் வருவழி, அஃது + யாது= அஃதியாது, அது யாது என்ற இருநிலையும் பெறும். (தொ. எ. 423, 424நச்.)