‘சுட்டுமுதல் வயின்’ புணருமாறு

வயின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும்இடைச்சொல்லாகவும் பெயராகவும் வரும். ‘சுட்டு முதல் வயின்’: அவ்வயின்,இவ்வயின், உவ்வயின் என்பன. அவை வருமொழி வன்கணத்தொடு புணர்வழி ஈற்றுனகரஒற்று றகரஒற்றாய்த் திரிய, அவ்வயிற் கொண்டான். இவ்வயிற் கொண்டான்உவ்வயிற் கொண்டான் – என்றாற் போலப் புணரும். சுட்டோடு இணைந்த வயின்பெயராகும். (தொ. எ. 334 நச்.)