சுட்டிடைச் சொல்லாகிய சினையெழுத்து நீண்ட மென் தொடர்க் குற்றியலுகரஈற்று மொழிகள் ஆங்கு, ஈங்கு, ஊங்கு – என்பன. வன்கணத்தொடு அவைபுணரும்வழி வருமொழி வல்லெழுத்து மிக்கே புணரும்.எ-டு : ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான்.(தொ. எ. 427 நச்.)