‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’புணருமாறு

சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகாரஈற்று இடைச் சொற்கள் ஆண்டைஈண்டை ஊண்டை என்பனவும், ஆயிடை போல்வனவு மாம். அவற்றுள் முதலன மூன்றும்வருமொழி வன்கணம் வந்துழி மிக்கே புணரும். ஆயிடை போல்வன உறழ்ந்துமுடியும்.எ-டு : ஆண்டைக் கொண்டான், ஈண்டைக் கொண்டான், ஊண்டைக் கொண்டான் -மிகுதிஆயிடைக் கொண்டான், ஆயிடை கொண்டான் – உறழ்ச்சி (தொ. எ. 159 நச்.உரை)