சிவபுரம்

சிவபுரம் என்ற பெயரிலேயே இன்றும் சுட்டப்படும் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. திருமால் வராகமாய் உருக்கொண்டு இறைவனைப் பூசித்ததலம் இது. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. சிவன் கோயில் காரணமாகச் சிவபுரம் எனப் பெயர் பெற்று இருக்கலாம்.
பதும நன்மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் திருஞான 21-2
மேலும் நதிக்கரையில் இதன் இருப்பிடத்தை,
இன் குரலிசைக் கெழும் யாழ் முரலத்
தன் கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொரு பழங் காவிரியின்
றென் கரை மருவிய சிவபுரமே திருஞான 112-1
மலைமகண் மறுகிய மதகரியைக்
கொலை மல்க உரி செய்த குழகனகர்
அலை மல்கு மரிசிலின தனயலே திருஞான 112 – 3
சிலைமல்கு மதிளணி சிவபுரமே எனப்பாடுகிறார். சிவனவன் காண் சிவபுரத் தெஞ் செல்வன் றானே எனப் பாடுகின்றார் அப்பர் (301 – 1). மேலும் சிவபுர நகர் என ஞானசம்பந்தர் (21) சுட்டும் நிலை இவ்வூர் சிறந்து விளங்கியதொரு தன்மைக்குச் சான்று.