சிற்றேமம்

சிற்றாய்மூர், சிற்றாம்பூர், எழிலூர், நேமம் எனப் பவாறாக வழங்கப்படுகின்ற இவ்வூர் தஞ்சை மாவட்டம் சார்ந்தது என்பர். ஆயின் தம் ஆராய்ச்சித் தொகுதியில் மு.இராகவையங்கார் இக் கோயிலிலுள்ள சாசனங்கள் இதனைச் சிற்றாய்மூர் என்றேவழங்கு கின்ற காரணத்தால் தேவாரம் குறிக்கும் ஊர் இதுவன்று என்றும் இம்மாவட்டத்திலேயே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற தலமே சிற்றேமம் எனவும் சுட்டுகின்றார். எனினும் பெயர்க் காரண புரியவில்லை. சிறை வண்டியாழ் செய்பைம் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத் தான் 300-1 எனவும், படு வண்டியாழ் செய்பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத் தான் 300 – 3 எனவும் இதன் வளம் சுட்டுகின்றார் சம்பந்தர்.