சிறுகுடி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இன்றும் இப்பெயரிலேயே அமைகிறது. சிறுகுடி என்பது சிறிய குடியிருப்புப் பகுதியைக் குறித்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமுடையது.
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடை முடியீரே
வெறி கமழ் சடைமுடியீருமை விரும்பி மெய்ந்
நெறியுணர் வோருயர்ந்தோரே (355-7)