சிரீவரமங்கை

இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நாங்குநேரி, வானமாமலை என்று பிற பெயர்கள் இருப்பினும், நாங்குநேரியே செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. திருமால் கோயில் கொண்ட நிலையில் ஸ்ரீ என்ற அடையுடன் கொண்ட மங்கலம் என்ற பெயர் பின்னர் சிரீவரமங்கை ஆகியிருக்கலாம் எனத் தோன்று மலை, ஏரி பிற இரண்டின் காரணங்களாக அமையலாமெனத் தோன்றுகிறது. நம்மாழ்வார் இத்தலத்திலுள்ள திருமாலைப் புகழ்கின்றார்.
சேற்றுத் தாமரை. செந்நெலூடு மலர்
சிரீவர மங்கல நகர் (நாலா -2590)
திங்கள் சேர் மணிமாடம் நீடு
சிரீவர மங்கல நகர் (நாலா -2591)
போன்றன இந்நகரின் பெருமைக்குரிய சில சான்றுகள்.