சிராப்பள்ளி

சங்க காலத்தில் உறையூர் மிகப் புகழ்பெற்றிருந்த நிலையைக் காண்கின்றோம், இடையில் சிராப்பள்ளிக் கோயில் நிலையில் புகழ்பெற, இன்று உறந்தை புகழ் மறைந்து திருச்சிராப்பள்ளி மிகுந்த புகழுடன் அமையும் நிலை அமைகிறது. உறைவதற்கு ஏற்ற இடம் என்ற நிலையில் காவிரிக்கரையில் மிக்க புகழுடன் இருந்த நிலையைச் சங்க இலக்கியம் காட்டும், அரசியல் நிலையிலும், மன்னர் வாழ்விடமாக இது அமைந்தது. 1. சிராப்பள்ளி என்ற பெயர் இன்று திருச்சிராப்பள்ளி என்றுவழங்கினாலும் திருச்சி என்ற குறுக்கமே பெரும்வழக்காக அமைகிறது. பள்ளி பொதுவாக வாழ்விடம் குறித்து அமையி னும், இப்பெயரோடு தொடர்புடை வரலாறுகளைக் காண சமணர் தொடர்புடையதாகவே து அமைந்திருக்கலாம் எனத் துணியலாம். மூன்று தலைகளைப் பெற்று இருந்த அசுரன் வழிபட்டமை யால் திருச்சிராப்பள்ளி என்று பெயர் பெற்றது என்பர். போன்ற பலஎண்ணங்கள் இது குறித்து வழங்கின எனினும், இவ்வூர் பற்றிய தோற்றம் நோக்க தெளிவு கிடைக்கின்றது. முதலில் பழமை நிலையில் காணலாம். சிராப்பள்ளி என்ற பெயர் பண்டு இல்லை. உறந்தை என்ற பெயரே முதலில் இருந்தது. உறந்தையைச் சார்ந்த இன்று அமையும் மலைப் பகுதியைக் குறிக்கும் அக நானூற்றுப் பாடல், கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து என இக்குன்றம் பற்றி இயம்பு எனவே இப்பெயரின்மை உறுதிப்படுகின்றது. கின்றது. சிராப்பள்ளியைப் பற்றிய ஆய்வு செய்யும் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார். இவ்வூர்ப் பின்னணியை நன்கு ஆய்கின்றார். இவ்வாய்வில் இவர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்துக் கொண்டிருந்தனர் என்பது நன்கு தெரியப்படும். அவர்களுள் சிரா என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராயிருந்தமை பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கத் தொடங்கி, அவர் காலத் திற்குப் பின்னரும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று என சுட்டிச் செல்வது இப்பெயரைப்பற்றிய தெளிவைத் தருமாறு அமைகிறது. மகேந்திரவர்மன் சிராப்பள்ளி பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்தவன் என்பது ஆராய்ச்சியில் பெறப்படுகிறது என்றும் இவர் குறிப்பிடுகின்றார். சிராப்பள்ளி கோயிலைப் பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சென்றடையாத திருவுடையானைச் சிராப் பள்ளி குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே (98-1) என்கிறார் சம்பந்தர்.