பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனாரால் பாடப்பெற்றான் (புறம். 59) என்ற செய்தியால் நாம் அறியும் பெயர் சத்திர மாடம் என்பது. பெரும்பாலும் ஊர்ப் பெயராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ண முடிகிறது. ஆயினும் அரண்மனையின் மேல்மாடம் எனக்கூறுவதே பொருத்தமுடையதாகத் தெரிகிறது.