சித்திபுரம்

சித்தி என்றால்‌ ஒரு வகை மரம்‌ அல்லது கொடி போன்ற தாவரத்தைக்‌ குறிக்கும்‌ பெயராகும்‌. ஆகவே சித்திபுரம்‌ என்பது தாவரத்தால்‌ பெற்ற பெயர்‌ எனக்‌ கொள்ளலாம்‌. மணிமேகலை பழம்பிறப்பில்‌ இலக்குமி என்னும்‌ பெயருடை யவள்‌, இராகுலன்‌ என்பவன்‌ அவள்‌ கணவன்‌. அவன்‌ சித்தி புரத்தை ஆண்ட சீதரன்‌ என்ற மன்னனுடைய மகளாகிய நீலபதியின்‌ வயிற்றில்‌ பிறந்தவள்‌ என்பது மணிமேகலை கூறும்‌ செய்தி.
“இலக்குமி யென்னும்‌ பெயர்‌ பெற்றுப்பிறந்தேன்‌
அத்திபதி யெனும்‌ அரசன்‌ பெருந்தேவி
சித்திபுரம்‌ ஆளுஞ்‌ சீதரன்‌ திருமகள்‌
நீலபதி யெனும்‌ நேரிழை வயிற்றில்‌
காலை ஞாயிற்றுக்‌ கதிர்‌ போற்றோன்றிய
இராகுலன்‌ தனக்குப்புக்கேன்‌” (மணிமே. 6:41 4)