சிக்கல்

இன்றும் சிக்கல் எனச் சுட்டப்படும் பெயர் சம்பந்தர் பாடல் பெற்றது. வசிட்டர் காமதேனுவின் வெண்ணையினால் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார். பூசை முடிவில் அதை எடுக்க முயன்றபோது முடியாமல் சிக்கிக் கொண்டமையால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம் இவ்வூர்ப் பெயர் பற்றி அமைகின்றது. ஞானசம்பந்தர் இத்தலத்தின் மிகுந்த செழுப்பினைப் பாடுகின்றார்.
மடங்கொள் வாளை குதிகொள்ளுமணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறையோரவர் மல்கிய சிக்கல் 144-2
நீல நெய் தன்னிலவம் மலருஞ் சுனை நீடிய
சேலும் மாலுங்கழனிவ் வளமல்கிய சிக்கல் 144-3
இப்பாடல்களை நோக்க வளங்கள் சிக்கிக் கிடக்கும் தன்மை காரணமாக இப்பெயர் பெற்ததோ என எண்ணத் தோன்றுகிறது.