சாவகம் என்பது ஜாவா என்பதாகும். யவனத் தீவு என்றும் கூறப் பெறுவது. ஆபுத்திரனிடம் சாவக நாட்டிலே மழையில்லை. மக்கள் பசியால் வாடுகின்றனர் என்று மரக்கலத்தில் வந்தவர் கூற ஆபுத்திரன் அந்நாட்டிற்கு கப்பலில் சென்றான் என்று மணிமேகலை கூறுவதால் கப்பலில் சென்று சேர வேண்டிய ஒருநாடு சாவகநாடு எனத் தெரிகிறது. வழியில் மணிபல்லவத்தில் கப்பல் தங்கிய செய்தியும் கூறப்படுவதால் மணிபல்லவத்தைக் கடந்தே சாவக நாட்டிற்குச் செல்ல வேண்டும் எளவும் தெரிகிறது.
“சாவக நன்னா ட்டுத் தண்பெயல் மறுத்தலின்
களனுயிர் மடிந்த துரவோய் என்றலும்
அமரர்கோன் ஆணையின் அருந்து வோர்ப் பெறாது
குமரி மூத்த என்பாத்திரம் ஏந்தி
அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மூழ்வுடனேதுக்
கால்விசை கடுகக் கடல் கலக்குறுதலின்
மாலிதை மணிபல்லவத்திடை வீழ்ந்துத்
தங்கிய தொரு நாள் தானாங் கிழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றிகை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல்லிருள் போதலும்” (மணிமே. 14: 74 84)