சாலியூர்‌ (நெல்லின்‌ ஊர்‌)

தலையாலங்‌ கானத்துச்‌ செருவென்ற பாண்டியன்‌ நெடுஞ்‌செழியன்‌” நெல்லின்‌ ஊர்‌ கொண்ட உயர்‌ கொற்றவ’ என்று சங்க இலக்கியத்தில்‌ கூறப்பெற்றுள்ளான்‌. இதற்குப்‌ பொருள்‌ எழுதிய நச்சினார்க்கனி௰ர்‌ “நெல்லின்‌ பெயரை”ப்‌ பெற்ற சாலி யூரை௫* கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவன்‌” என்று கூறினார்‌. மேலும்‌ அவரே “நெல்லின்‌ என்பதிலுள்ள இன்னை அசையாக்கி ‘நெல்லூர்‌’ என்பாரும்‌ உளர்‌ என்றார்‌. நெல்லூர்‌ அல்லது சாலியூர்‌ என்று சங்க இலக்கியத்தில்‌ கூறப்‌ பெற்ற இன்றைய ஆந்திர நாட்டைச்‌ சேர்ந்த நெல்லூர்தான்‌ என்பதில்‌ ஐயமில்லை. ஆந்திர நாட்டு அப்பகுதி வரை அன்றைய தொண்டைமண்டலம்‌ அதாவது தமிழகம்‌ பரவி இருந்தது என்று கருதவேண்டும்‌ தமிழகத்தின்‌ எல்லை அவ்வூர்‌ வரை விரிவடைநீ இருந்தது என்பதையும்‌ சிறப்புற்றிருந்தது என்பதையும்‌ சங்க இலக்கியத்தின்‌ மூலம்‌ உணரமுடிகிறது. சங்க காலத்தில்‌ அவ்வூரின்‌ பெயர்‌ சாலியூர்‌ என வழங்கியதா அல்லது நெல்லூர்‌ என வழங்கியதா என்பதும்‌ ஆய்வுக்குரியதே. சாலி என்பது ஒருவகை நெல்லின்‌ பெயர்‌: என்பதை “சாலி நெல்லின்‌” என்ற சங்க இலக்கியத்தொடர்‌ மூலம்‌ உணர முடிகிறது. ஆகவே “நெல்லின்‌ ஊர்‌“ என்ற தொடர்‌ சாலியூர்‌ என்ற பெயரையே குறிப்பதாகக்‌ கொள்ளுவதில்‌ தவாறொன்றுமில்லை. அப்பெயரே அவ்வூர்‌ தமிழர்‌ ஆட்சியில்‌ இருந்த காலத்‌திலேயே “நெல்லின்‌ ஊர்‌” போன்ற புலவர்‌ குறிப்புகளால்‌ நெல்லூர்‌ என்றே திரிந்து வழங்கியிருக்கலாம்‌ என எண்ணுவதிலும்‌ தவறு ஒன்றும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை. அவ்வாறு திரிந்து வழங்கிய பெயர்‌ இன்றளவும்‌ வழக்கில்‌ நிலைத்து விட்டிருக்கலாம்.
“கூனி, குயத்தின்‌ வாய்நெல்‌ அரிந்து
சூடு கோடாகப்‌ பிறக்க, நாள்தொறும்‌,
குன்று எனக்‌ குவைஇய குன்றாக்‌ குப்பை
கடுந்தெற்று மூடையின்‌ இடம்‌ கெடக்‌ கிடக்கும்‌,
சாலிநெல்லின்‌, சிறை கொள்‌ வேலி,
ஆயிரம்‌ விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும்‌ நாடு கிழவோனே.” (பத்துப்‌. பொருத. 242 248)
“சீர்சான்ற உயர்‌ நெல்லின்‌
ஊர்‌ கொண்ட உயர்‌ கொற்றவ.” (௸. மதுரைக்‌. 87 88)