சாத்தங்குடி

சாத்தங்குடி என்ற ஊர். திருநாவுக்கரசர் தேவாரம் சுட்டும் ஊர். சேக்கிழாரும் குறிப்பிடுகின்றார்.
எல்லாரும் தளிச் சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதிற் திருவாரூர் புக்கார் தாமே
என்கின்ற அடியைக் காணும் போது தளி என்பதைக் கோயில் என்ற பொருளில் காண்கின்றோம். சாத்தங்குடியில் உள்ள கோயில் என்ற பொருளில் தளிச்சாத்தங்குடி என்ற பெயர் அமைந்திருக்கலாம். சாத்தர் என்ற சொல் வணிகரைக் குறிப்பதை. அதர் கெடுத்தலறிய சாத்தரொடாங்கு என அகநானூறு (39) தருகிறது. எனவே வணிகர்கள் சேர்ந்து வாழ்ந்த குடியிருப்பு என்ற நிலையில் சாத்தங்குடி என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.