சிற்றகத்தி என்னும் செடிவகையைக் குறிக்கும் சயந்தி என்னும் சொல் அவ்வகைச் செடிகள் அமைந்த பகுதியில் அமைந்த ஊருக்குப் பெயராய் அமைந்தது போலும். சயந்தி உதயணனுடைய ஆட்சிக்குட்பட்டதொரு பெரிய நகரம். இதனை உருமணணுவா பாதுகாத்து வந்தனன். உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் இந்நகரத்திலேதான் விவாகம் நடந்தது. மருதநில வளத்தால் சிறந்தது. இதன் பக்கத்தே அழகிய மலை யொன்றுண்டு. இதுவும் வேறுசில இடங்களும் உருமண்ணுவாவுக்கு உதயணனால் சீவிதமாக அளிக்கப்பெற்றன.
“உருமண்ணுவாவுக்கு ரிமையினிருந்த
சயந்தியம் பெரும்பதி யமர்ந்து புக்கனரால்” (பெருங், 1:58 107 108)
“அறம்புரி யாட்டி யமைச்சனி னீங்கி
மறம்புரி தரனை மன்ன வனிருந்த
சயந்தியம் பெரும்பதி யியைந் தகம்புக்கு (௸. 2: 10: 144)