சம்புத்தீவு

நாவல்‌ எனப்‌ பொருள்படுவது சம்பு என்னும்‌ சொல்‌. தாவரத்தால்‌ பெற்ற பெயர்‌ சம்புத்தீவு (சம்பங்‌ கோரை என்ற புல்வகையும்‌ சம்பு எனப்படும்‌) நாவலந்‌தீவையே சம்புத்தீவு என்றனர்‌. தமிழகம்‌ அதில்‌ ஒரு பிரிவு, சம்புத்‌ தீவை நான்கு பெரிய தீவுகளில்‌ ஒன்று என்பர்‌.
“சம்புத்‌ தீவினுள்‌ தமிழக மருங்கில்‌
கம்பமில்லாக்‌ கழிபெருஞ்‌ செல்வர்‌
ஆற்றா மாக்கட்கு ஆற்றுந்துணையாகி
நோற்றோருறைவதோர்‌ நோனகருண்டால்‌
பலநாளாயினும்‌ நிலனொடு போகி
அப்பதுப்‌ புகுகென்றவனருள்‌ செய்ய
இப்பப்‌ புகுந்தீங்கியானு றைகின்றேன்‌” (மணிமே. 17 : 62 68)