சண்பை

ஒருவகை கோரைப்‌ புல்லைக்குறிக்கும்‌ சொல்‌ சண்பை என்பது. அப்புல்‌ நிரைந்த பகுதியில்‌ அமைந்த நகர்‌ சண்பை எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌. சண்பை நகர்‌ அங்க நாட்டிலுள்ள பெரிய நகரம்‌ மிக்க வளமுள்ளது. விசயவரன்‌ என்பவனால்‌ பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நகரில்‌ மித்திரகாமன்‌ என்னும்‌ வணிகர்‌ பெருமான்‌ வீட்டில்‌ யூகி, வாசவதத்தை, காஞ்சன மாலை சரங்கியத்தாய்‌ ஆகிய நால்வரும்‌ வேற்று வடிவங்கொண்டு தங்கியிருந்தனர்‌.
“ஈங்கிந்‌ நகரத்தியான்‌ வருங்காரணம்‌
பாராவாரம்‌ பல்வனம்‌ பழுநிய
காராளர்‌ சண்பையிற்‌ கெளசிகனென்போன்‌
இரு பிறப்பாளன்‌ ஒரு மகளுள்ளே
ஒருதனி யஞ்சே னோரா நெஞ்சமோடு
ஆராமத்திடை யலர்‌ கொய்‌ வேன்றணை” (மணிமே. 3:27 33)
“உக்கிர குலத்துளரசருளரசன்‌
விற்றிறல்‌ தானை விசயவரனென்னும்‌
நற்றிறல்‌ மன்னன்‌ நாளும்‌ காக்கும்‌
சண்பைப்‌ பெருநகர்ச்‌ சால்போடும்‌ விளங்கிய” (பெருங்‌ 2:20: 122 125) (சீகாழிக்கும்‌ சண்பை என ஒருபெயர்‌ உண்டு இங்கே குறிக்கப்‌ பெற்றது அதுவல்ல)