சேக்கிழாரின் பெரிய புராணம் காட்டும் ஒரு ஊர். கழறிற்றறி வார் புராணத்தில் அமைகிறது.
பொன்பரப்பி மணி வரன்றிப்புனல் பரக்கும் காவேரித்
தென்கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பலசென் றிறைஞ்சி
மின் பரப்பும் சடையண்ணல் விரும்பு திருச்சண்டியூர்
அன்புருக்கும் சிந்தையுடன் பணிந்து (130)
என, காவிரிக் கரைத் தலங்கள் வணங்கி, திருச்சண்டியூர் சென்ற நிலையைச் சுட்டும் தன்மை இதனையும் சோழநாட்டுத் தலமாக எண்ணச் செய்கிறது சண்டீஸ்வரர் என்ற இறைப் பெயரால் இப்பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.