சங்கமங்கை

சேக்கிழார் பாடலில் இடம்பெறும் தலம். சாக்கிய நாயனார் புராணத்தில்,
தாளாளர் திருச்சங்க மங்கையினில்
தகவுடைய வேளாளர் குலத்தில்
என்று வரும் நிலை இப்பெயர் சுட்டும். எனவே சாக்கிய நாயனார் பிறந்த ஊர் இது என்பது தெரிகிறது. இப்பெயர் குறித்து மயிலை சீனி வேங்கடசாமி, இந்த ஊரின் பெயரே இது பௌத்தரது ஊர் என்பதைத் தெரிவிக்கும். சங்கம் என்பது புத்த. தாம, சங்கம் என்னும் மும் மணிகளில் ஒன்று. அதாவது பௌத்த பிக்ஷுக்களுக்குச் சங்கம் என்று பெயர். எனவே சங்க மங்கை என்ற பெயர் பௌத்தச் சார்பானதென்பதைத் தெரிவிக்கிறது என்கின்றார்.