சக்கரப்பள்ளி

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஊர். தற்போதைய ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை, சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (பதி -285).
நலமலி கொள்கையார் நான் மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர் மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப்பள்ளியே – 285-4