ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள்
ஒருசொல்லாய் வரினும், தனித்து வரும் தன்மையதன்றி, முடவன் கோல் ஊன்றி
வந்தாற்போலச் சுட்டும் வினாவும் ஆகிய இடைச்சொற்களை முன்னிட்டு
வருதலான் ‘வழி’ என்றும், ஏனைய மெய்கள் போல முதலாகா மையின் ‘அவ்வொடு’
என்னாது ‘அவ்வை ஒட்டி, என்றும், ஒருவாற்றான் முதலாதலின் இழிவு
சிறப்பாக ‘ஙவ்வும்’ என்றும் கூறினார். (நன். 106 சங்கர.)