கோ எனும் சொல் புணருமாறு

கோ என்ற ஓகார ஈற்றுச்சொல் உருபுபுணர்ச்சிக்கண்ணும்
பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஒன்சாரியைபெற்று வருமொழி யொடு புணரும்.
ஒன்சாரியை பிற்காலத்து ‘ன்’ சாரியை ஆயிற்று.
எ-டு : கோ + ஒன் + ஐ = கோஒனை; கோ + ஒன் + கை = கோஒன்கை
ஓகாரஈற்றுப் பெயர் ஒகரமாகிய எழுத்துப்பேறளபெடை பெறுதலும், வருமொழி
வல்லெழுத்து மிக்குப் புணர்தலும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
உண்டு.
எ-டு : கோ + கடுமை = கோஒக்கடுமை
கோ என்பது அரசனைக் குறிக்கும் உயர்திணைப்பொருளது ஆயினும், கோ
வந்தது என்றாற் போல அஃறிணை வினை யொடு முடிதலின், சொல்லான் அஃறிணையாம்.
அரசு, அமைச்சு, தூது, புரோசு, ஒற்று முதலாயினவும் அன்ன. (தொ. எ. 292,
293 நச். உரை)