கோவைக் கலித்துறை

கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் காப்பியக் கலித்துறை எனவும்இருவகைத்து என்பர்.நெடிலடி நான்காய், நேரசையில் தொடங்கும் ஓரடிக்கு எழுத்து ஒற்றும்ஆய்தமும் ஒழித்துப் பதினாறும், நிரையசை யில் தொடங்கும் ஓரடிக்குஎழுத்துப் பதினேழும் என வர அமையும் யாப்புக் கலித்துறையாம்.இவ்விலக்கணம் கூறும் வீரசோழியக் காரிகை (124) கோவைக் கலித்துறை ஆமாறுணர்த்துவதாக அவ்வுரையாசிரியர் குறித்தார்; அக் கட்டளைக் கலித்துறைச்சூத்திரத்தினையே அதற்கு இலக்கிய மாகவும் கொள்ளுமாறு சுட்டினார்.ஆதலின் வீரசோழிய உரையாசிரியர் கருத்துப்படி கோவைக் கலித்துறைகட்டளைக் கலித்துறையேயாம். (வீ. சோ. 124)