கோவைக் கலித்துறை, திலதக்கலித்துறை: வேறுபாடு

கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் திலதக் கலித்துறைஎனவும் இருவகைத்து.கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல் பக்கு விட்டுமுற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய் வரும்; இரண் டாம் நான்காம்சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம்.எ-டு : ‘மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே’ (கோவை. 2)‘நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே’ (தஞ்சை. கோ.2)திலதக் கலித்துறை, ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றிநிகழ்வது.எ-டு : ‘உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்(று) ஒளிர்கின்றதே’(கோவை. 1)வீரசோழியப் பழைய குறிப்புரையால் இவ்வாறு வேறுபாடு கொள்ளக்கிடக்கின்றது. (வீ.சோ. 128)