இவ்வூர் கோவல் என்றும் கோவலூர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. மலையமான் திருமுடிக்காரி முதலியோர் ஆண்ட ஊர், ஒரு காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியால் வெல்லப் பட்ட ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையின் கண்ணுன்ளது.
“துஞ்சா முழவிற் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காமி கொடுல்கால் முன்துறை
பெண்ணை யம்பேரியாற்று துண் அறல் கடுக்கும்
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே”’ (அகம். 35. 14 18)
“முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரணடு திரி ஏந்திய தோளே” (புறம். 99, 13 14)