கோழம்பம்

கோழம்பம் என்றே இன்றும் சுட்டப்படும் ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தராலும், அப்ப ராலும் பாடல் பெற்ற தலம் இது. பொழில் சூழ்ந்த கோழம்பத்தின் சிறப்பே இருவராலும் சுட்டப்படுகிறது.
குளிர் பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை – திருஞான -149-1
பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துண் மகிழ்ந்தாடும் கூத்தன் திருநாவு – 178-4