அகத்திணைச் செய்யுள் இலக்கணம் பத்தனுள் ஒன்று ‘கோள்’ ஆம். அஃதாவதுசெய்யுட்குப் பொருள்கொள்ளும் முறைமை.அஃது ஐந்து வகைப்படும்.1. விற்பூட்டு – செய்யுள் முதலும் கடையும் பொருள்கொண்டுநிற்பது.2. விதலையாப்பு – தலையும் நடுவும் கடையும் பொருள் கொண்டுநிற்பது.3. பாசிநீக்கு – சொல்தோறும் அடிதோறும் பொருள் முடிந்துநிற்பது.4. கொண்டு கூட்டு – எவ்வடிச் சொற்களையும் ஏற்புழிச் சேர்த்துப்பொருள் செய்ய நிற்பது.5. ஒருசிறைநிலை – பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்பது; இன்றியமையாத கருத்து ஈற்றடியில் நிற்பது.எ-டு : ‘வருவர் வயங்கிழாய்! வாட்டாற் றெதிர்நின்றுவாள்மலைந்தஉருவ மணிநெடுந் தேர்மன்னர் வீய ஒளிதருமேல்புருவம் முரிவித்த தென்னவன் பொன்னங்கழலிறைஞ்சாச்செருவெம் படைமன்னர் போலவெங் கானகம் சென்றவரே’இது விற்பூட்டுப் பொருள்கோள். ‘சென்றவரே வருவர்’ என இறுதியும்முதலும் எழுவாய்த் தொடராய்ப் பொருள் தந்தவாறு.பண்தான் அனையசொல் லாய்! பரி விட்டுப்பறந்தலைவாய்விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்தவண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவனகண்டால், கடக்கிற்ப ரோ?கட வார்அன்பர் கானகமே.’இது விதலையாப்புப் பொருள்கோள். சொல்லாய்! கொல்லிப் பாங்கர், கொடிநின் இடைபோல வணங்குவன கண்டால், அன்பர் கானகம் கடவார்’ எனத் தலை இடைகடைஎன எல்லா இடத்தும் பாடலில் பொருள் அமைந்தவாறு.‘சென்றார் வருவது நன்கறிந் தேன்;செருச் செந்நிலத்தைவென்றான் பகைபோல் மெலியல் மடந்தை! உம் வெற்பெடுத்துநின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது; நீள் புயலால்பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே’இது பாசிநீக்குப் பொருள்கோள். (1) ‘நன்கு அறிந்தேன்; (2) மடந்தை!மெலியல்; (3) நிலமும் குளிர்ந்தது; (4) பொலங் கொன்றை தாமும் பொலிந்தன- என அடிதோறும் சொற்கள் பொருள் தொடர்பு பட இயைந்து (கொண்டு கூட்டவேண்டாமல்) முடிந்தமை காணப்படும்.‘கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன்முந்நீர்தூவைச் சுடர்வே லவர்சென்ற நாட்டினும் துன்னும்கொலாம்பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப்பாவைக் கிணைஅனை யாய்! கொண்டு பண்டித்த பன்முகிலே!’இது கொண்டு கூட்டுப் பொருள்கோள். ‘பாவைக்கு இணை அனையாய்!முந்நீர்க் கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன் நெடுமாறன் திரைபொருநீர்க்குமரி கொண்டு பண்டித்த, பூவைப் புதுமலர் வண்ணன் (போன்ற)பன்முகில், தூவைச் சுடர் வேலவர் சென்ற நாட்டினுள் துன்னும்கொல்?’ என,பல அடிகளிலும் கிடந்த சொற்களை ஏற்றவாறு இயைத்துப் பொருள்கொள்ளப்பட்டவாறு. (பாவை – கொல்லிப்பாவை; முந்நீர் – கடல்; கடலிற்பிறந்த முத்துக்கள்; மாறனுடைய குமரித்துறை; குமரித்துறையிற்படிந்துண்ட பல மேகங்கள்; கண்ணன் போன்ற நிறத்தவாகிய மேகங்கள். பிரிந்துசென்றவர் நாட்டின்கண்ணும் அவை சென்றடை யுமோ?‘கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின; கொன்றைசெம்பொன்பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்றஆடல் நெடுங்கொடித் தேர்அரி கேசரி அம்தண்பொன்னிநாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய? நன்னுதலே!’இஃது ஒரு சிறைநிலைப் பொருள்கோள். கோடல் மலர்தல். குருக்கத்தி தளிர்ஈனுதல் (1), கொன்றை செம்பொன் போன்று பூக்களைப் பாரித்தல் (2) என்னுமிவற்றால் தலைவி கார்கால வரவுணர்ந்து தலைவன் இன்னும் மீண்டிலாமை கருதிமெலிய லுற்றாள் என, பாடற்பொருளாம் தலைவியது மெலிவு ஈற்றடியாகியஓரிடத்தே நின்றவாறு. (இறை. அ. 56 உரை)