தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் ஊர். சீர்காழிக்கு 1கி.மீ. தொலைவில் உள்ள தலம் எனக் காண கோயில் அமைந்த இடம் கோலக்கா என்று சுட்டப்பட்டது என்பது தெரிகிறது. மேலும் இன்று கோயில் பெயரால் திருத் தாளமுடையார் கோயில் என்றே இவ்விடத்தைக் சுட்டும் தன்மை கோயில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தமைக்குச் சான்று. அழகிய சோலைகளின் காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம். சேக்கிழார் கூற்றும் இவ்விடத்தின் அழகினைத் தரும் நிலையில் அமைகிறது.
பெருங் கோலிட் டலை பிறங்கும் காவிரி நீர் பிரசமலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டாட மாதரார் குடைந்தாடு மணிநீர் வாவித்
திருக் கோலக்கா எய்தி (34-101)
ஞானசம்பந்தர் இத்தலத்தை,
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா (23-1)
எனப்பாடுகின்றார். சுந்தரர், கொங்குலாம் பொழிற் குரவெறிகமழும் கோலக்கா (62-2) என்பார். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருமுலைப்பால் உண்டருளிய மறு நாள் இத்தலத்திற்கு எழுந்தருளிக்கையினால் தாளமிட்டுப் பாடினார். அப்போது இறைவன் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளம் இவர் கை வந்தருளப் பெற்றது. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் – பக் -34