கோமூத்திரி

பருவ மாகவி தோகன மாலையே // பொருவி லாவுழை மேவன கானமே// மருவு மாசைவி டாகன மாலையே // வெருவ லாயிழை பூவணி காலமே.இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவுமெழுதி, அவ்வரி இரண்டையும் மேலுங் கீழும் ஒன்றிடையிட்டுக் கோமூத்திரரேகைவழிப் படிக்க, ஒன்றுவிட் டொன்று மாறடி அச்செய்யுளே முடியுமாறுகாண்க.