கோன் என்ற இயற்பெயர் ‘தந்தை’ என்ற முறைப்பெயரொடும், ‘மகன்’ என்ற
முறையில் குறித்து வரு கிளவியாக வரும் ஏனைய இயற்பெயர்களொடும்
பொருந்தும்வழி, னகரஈற்ற இயற் பெயர்களின் சிறப்புவிதி பெறாமல், அஃறிணை
இயற்பெயர் களுக்குரிய பொதுவிதியான் இயல்பாக முடியும்.
வருமாறு : கோன் + தந்தை = கோன்றந்தை
கோன் + கொற்றன் = கோன் கொற்றன் (தொ. எ. 351 நச்.)