கோட்டூர்

தஞ்சை மாவட்டத்தில் அமையும் ஊர். ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இரண்டு சிவன் கோயில்கள் கொண்ட ஊர். கருவூர்த் தேவரும் திருவிசைப்பா இது குறித்துப் பாடியுள்ளார்..
துன்று பைம் பொழில்கள் சூழ்ந்த ழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர் நற் கொழுந்தே
என ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலைக் காணும் போது அழகிய கொடிகள் படர்ந்த இவ்வூர்ச் செழிப்பு காரணமாகக் கோட்டூர் என்று பெயர் பெற்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சேக்கிழார், செம்பொன் மதில் கோட்டூர் என இதனைச் சுட்டுவர் (34. 574). கல்வெட்டுகளும் இவ்வூரைக் கோட்டூர் என்றே குறிப்பிடுகின்றன.