கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்

சுண்ணாம்பும் மஞ்சளும் இரண்டறக் கூடியவழியே செந்நிறம் தோன்றுவது
போல, நெடிலும் குறிலும் இணைந்து ஒன்றாகக் கூடிய கூட்டத்துப் பிறந்து,
பின்னர் அப்பிளவுபடா ஓசையை அளபெடை என்று தொல். வேண்டினார் என்பர்
நச்சினார்க் கினியர். (எ. 6 நச். உரை) அளபெடை இரண்டு மாத்திரையும் ஒரு
மாத்திரையுமாகப் பிரித்து அசை கொள்ளப்படுதலானும், அளபெடைக் குறில்
அலகு பெறாத நிலையுமுண்டு ஆதலானும், அளபெடைக்கண் நெடிலும் குறிலும்
விரலும் விரலும் சேரநின்றாற்போல அளபெடுக்கும் என்பதே தொல். கருத்தாதல்
பெறப்படுகிறது. (எ. ஆ. பக். 45,46).