இராமநாதபுரத்தைச் சார்ந்து அமையும் ஊரான நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டுகின்றது. எனவே வைணவ சமயப் புகழ் பெற்றது என்பது தெளிவு. பெரியாழ்வார். திரு மங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை யாழ்வார் பாடல் பெற்றது இத்தலம், ஹிரண்யனை ஒழிப்பதற்குத் தேவர்கள் கோஷ்டியாக ரஹஸ்ய ஆலோசனை செய்த இடம் கோஷ்டியூர் என்ற எண்ணம் அமைகிறது
செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை யைப் (2-10)
பெரியாழ்வார் திருமொழி சுட்டுகிறது. திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி இவ்வூர் வளம் பற்றிக் காட்டுகிறது.
பொங்கு தண்ணருவி பதம் செய்யப்
பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூர் – 1838
நாறு சண்பக மல்லிகை மலர் புல்கி
இன்னிள வண்டு நன்னறுந்
தேறல் வாய் மடுக்கும் கோட்டியூர் -1841
வளம் பாண்டிய நாட்டுத் தலங்களுள் மிகச் சிறந்ததாக இத்தலம் கருதப்படுகிறது. கோடு – கொம்பு என்ற நிலையில் குறித்து எழுந்த பெயராகவும் இது அமையலாம். அல்லது வளைந்த அமைப்பு குறித்தும் பெயர் பெற்றிருக்கலாம்.