கோட்டாறு

இன்று கொட்டாரம் என்று வழங்கப்படும் ஊர். காவிரியின் தென் கரையில் சிறப்புற்ற ஊர் இது. வெள்ளையானை பூசித்து பேறு பெற்ற தலமாக இதனை, ஞானசம்பந்தர் பாடுகின்றார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரையில் உள்ளதொரு இடம் கோட்டாறு’ எனப் பெயர் அமைவது போன்று இதுவும் காவிரிக்கரையில் அமைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.