கேட்டம்பலம் என்னும் இவ்வூர், சேரமான் மாக்கோதையுடன் தொடர்புடையதாகக் கூறப்பெற்றிருப்பகால் கோடு அதாவது மலையுச்சி அங்கே பலர் கூடும் இடம் அம்பலம் மலையுச்சியில் பலர் கூடும் இடத்திற்குப் பெயராய் முதற்கண் கோட்டம்பலம் என்பது அமைந்து நாளடைவில் அந்த இடம் ஊராய் வளர்ந்த பொழுது அந்த ஊருக்குப் பெயராய் அமைந்ததோ என எண்ணத் தோன்றுவறெது. இவ்வூரில் துஞ்சியதால் சேரமன்னன் சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக் கோதை எனப் பெயர் பெற்றான். நற்றிணையில் 95ஆம் பாடல் இவ்வூரினராய கோட்டம்பல வளனார் என்னும் புலவர் பாடியது.