கோடி

குழகர் கோயில் என்று இன்று சுட்டப்படும் இத்தலம் தஞ்சா வூர் மாவட்டத்தில் அமைகிறது. கோடிக் குழகர் என்ற சுந்த ரர் பாடல் நிலையினின்றும் கோடி’, என்பது இடம் என்பதும் குழகர்’ என்பது சிவன் பெயர் என்பதும் தெளிவாக அமைகிறது. எனவே குழகர் என்ற இறைச்சிறப்பே குழகர் கோயில் என்ற இன்றைய பெயருக்குக் காரணமாக அமைகிறது எனலாம். கோடிக்கரை என்ற இத்தலம் கடற்கரை ஓரமாக அமைந்த காரணமே கரை ஓரம் என்ற பொருளில் ஊர்ப் பெயர் எழக் காரணமாக அமைந்திருக்கிறது.
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ சுந் – 32-1
என்ற பாடல் கடற்கரை சார்ந்த இவ்விடம் பற்றிய எண்ணம் தருகிறது.