கோடி

இன்றைய இராமேசுரத்துக்கு அருகில்‌ கோடிக்கரை என்று ஓர்‌ ஊர்‌ இருக்கிறது. “தொன்முதுகோடி”’ என்று சங்க இலக்‌ கியம்‌ குறிப்பது இந்தக்‌ கோடிக்‌கரை என்னும்‌ ஊரையேயாகும்‌. கடலுட்‌ செல்லும்‌ தரைமுனை எனப்பொருள்படும்‌ கோடி என்ற சொல்லே இவ்வூர்‌ கடற்கரையில்‌ அமைந்த ஊர்‌ என்பதைக்‌ காட்டுகின்றது. கோடிக்‌ கரையைப்‌ பற்றிச்‌ சங்க நூல்களில்‌ அகநானூற்றில்‌ ஒரே ஒரு செய்தி வருகின்றது. அகநானூறு 70ஆம்‌ பாடலில்‌ “தொன்முதுகோடி” என்று அழைக்கப்படும்‌ கோடிக்கரைப்‌ பாண்டிய மன்னருக்கு உரியதாகக்‌ கூறப்பெற்றுள்ளது. இங்கு ஓசையிட்டுக்‌ கொண்டிருந்த பறவைகளின்‌ ஒலியை இராமன்‌ நிறுத்தினான்‌ என்று அகப்பாட்டு கூறுகிறது. கோடிக்கரையில்‌ பறவைகள்‌ நிறைய இருந்தனவாக அகநானூறு கூறும்‌ செய்தி மிகவும்‌ சிறப்பானதாகும்‌. இரண்டாயிரம்‌ ஆண்டுகட்கு முன்னர்‌ கோடிக்‌ கரையில்‌ பறவைகள்‌ மிகுதியாக இருந்தமை பற்றி அகநானூறு கூறிய செய்தி இன்றும்‌ உண்மையாக இருப்பது மிகவும்‌ வியப்பான செய்தியாகும்‌. தமிழ்நாட்டில்‌ பறவைகளை மிகுதியாகக்‌ காண வேடந்தாங்‌கல்‌ செல்லுவதைப்போல கோடிக்கரைக்கும்‌ செல்லலாம்‌, அங்கே பலவகைப்‌ பறவை இனங்களைக்‌ காணலாம்‌. ஆகவேதான்‌ கோடிக்‌ கரையைப்‌ பறவைகள்‌ புகலிடமாகத்‌ (Bird sanctuary) தமிழக அரசுநிறுயுவிள்ளது. இந்தப்பறவைகள் புகலிடம்‌ இரண்டாயிரம்‌ ஆண்டு வரலாற்றுச்‌ சிறப்புடையது என்பதை அகநானூறு தெரிவிக்கிறது. கோடிக்கரை முற்காலத்திலே தமிழ்நாட்டின்‌ கன்றுளைலிருந்து இலங்கைக்குச்‌ செல்லக்‌ குறுக்கு வழியாக இருந்ததாகத்‌ தெரிகிறது. கோடிக்‌ கரை முனைக்கும்‌ (point cahmere) இலங்கையிலுள்ள பேட்பே முனைக்கும்‌ (point Pedro) 40 மைல்‌ தூரம்‌ உள்ளது.
வென்வேற்‌ கவுரியர்‌ தொன்முது கோடி
முழங்கிரும்‌ பெளவம்‌ இரங்கும்‌ முன்‌ துறை,
வெல்‌ போர்‌ இராமன்‌ அருமறைக்கு அவித்த
பல்வீழ்‌ ஆலம்‌ போல
ஒலி அவிந்தன்று இவ்‌ அழுங்கல்‌ ஊரே“, (அகம்‌. 70 : 13 17)